×

அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் உயிரிழப்பு தடுக்க மக்கள் யோசனை

அரவக்குறிச்சி, டிச. 28: அரவக்குறிச்சி கொத்த பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் குளிக்க வருபவர்களில் உயிரிழப்பு ஏற்படுவதால் எச்சரிக்கை போர்டு வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனார். அமராவதி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் போது ஆற்றில் நீர் அதிகரித்து கொத்த பாளையம் அமராவதி ஆறு தடுப்பனை நிரம்பி வழியும். ஆண்டுக்கு 6, முறைக்கும் மேலாகவது நிரம்ப வழியும் நிலை ஏற்படும். இந்நிலையில் அரவக்குறிச்சி சுற்றுப்பகுதியில் வேறு எந்த வகையிலும் மகிழ்ச்சியுடன் பொழுது போக்க எந்த இடமும் இல்லை.

ஆகையால் அரவக்குறிச்சி கொத்த பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் தண்ணீர் வந்ததும், ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரை ரசிக்கவும், அணையில் குளிக்கவும் ஆண், பெண் சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானவர்கள் வருகின்றனர். ஆர்வ கோளாறு காரணமாக இதில் குளிப்பவர்களில் சிலர் மூழ்கி இறக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடும் போது பெரும்பாலும் ஒரு சில உயிரிழப்பாவது ஏற்படுகிறது.
இதில் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர். 4 நாட்களுக்கு முன்பு கூட ஒரு இளைஞர் உயிரிழந்தார். எனவே அரவக்குறிச்சி கொத்த பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் குளிக்க வருபவர்களில் உயிரிழப்பு ஏற்படுவதால் விழிப்புணர்வு எச்சரிக்கை போர்டு வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் உயிரிழப்பு தடுக்க மக்கள் யோசனை appeared first on Dinakaran.

Tags : Amaravati river barrage ,Aravakurichi ,Kottha ,Palayam ,Dinakaran ,
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...